/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
/
ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ADDED : அக் 25, 2025 06:59 AM

விழுப்புரம்: விழுப்புரத்தில் தமிழ்நாடு ஓய்வூதியர் சங்கத்தினர் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
நகராட்சி திடலில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் புருஷோத்தமன் தலைமை வகித்தார். மாவட்ட செயலர் குருசேகரன் வரவேற்றார்.
துணை தலைவர்கள் ஜெயராமன், ஞானசேகர், கோவிந்தன் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாவட்ட தலைவர் பூவழகன், ஆசிரியர் சங்கம் புஷ்பா, சுப்புலட்சுமி உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
இதில், 70 வயது முடிந்த ஓய்வூதியர்களுக்கு கூடுதலாக 10 சதவீதம் ஓய்வூதியம் வழங்க வேண்டும்; அங்கன்வாடி, சத்துணவு பணியாளர்களுக்கு ஓய்வூதியமாக ரூ.7,850 வழங்க வேண்டும்; என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

