நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : விழுப்புரத்தில் அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்ஷனர்கள் கூட்டமைப்பு சார்பில் பென்ஷனர் தின விழா நடந்தது.
நிகழ்ச்சிக்கு, வட்டார தலைவர் ராஜசேகரன் தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் மதிவாணன், ராமமூர்த்தி முன் னிலை வகித்தனர்.
செயலாளர் சீனு சுந்தரம் வரவேற்றார். பொருளாளர் ராஜாமணி, ஆண்டறிக்கை, வரவு செலவு அறிக்கை வாசித்தார்.
நிகழ்ச்சியில், 70 வயது முதல் 85 வயது வரை நிறைவடைந்தோருக்கும், சங்கத்தில் சிறப்பான சேவை புரிந்தோருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.