/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பென்ஷனர் கூட்டமைப்பு 20வது ஆண்டு விழா
/
பென்ஷனர் கூட்டமைப்பு 20வது ஆண்டு விழா
ADDED : ஜூன் 20, 2025 11:34 PM

விழுப்புரம் : விழுப்புரத்தில் அகில பாரத மூத்த குடிமக்கள், பென்ஷனர் கூட்டமைப்பின் 20வது ஆண்டு விழா நடந்தது.
மாவட்ட தலைவர் சிவகுருநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட பிரதிநிதி ஜானகிராமன், மாநில பிரதிநிதி கோபாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைத் தலைவர் குகசரவணபவன் வரவேற்றார்.
துணைச் செயலாளர் ராஜகோபால் ஆண்டு அறிக்கை வாசித்தார். செயலாளர் சேது விவேகானந்தன் தீர்மானங்களை முன்மொழிந்தார். பொருளாளர் கோவிந்தராசு ஆண்டு வரவு செலவு அறிக்கையை வாசித்தார்.
மாநில தலைவர் ராசண்ணன், ஆண்டு விழா மலரை வெளியிட்டு பேசினார். பொதுச் செயலாளர் தங்கராசு, பணி நிறைவு பெற்ற புதிய உறுப்பினர்களை பாராட்டி பேசினார். மாநில பொருளாளர் ராமசாமி, சிறப்பாக செயல்பட்ட வட்டார நிர்வாகிகளை பாராட்டி விருது வழங்கினார்.
மாநில துணை தலைவர் ராமுசிதம்பரம், விழுப்புரம் வி.ஆர்.பி., மேல்நிலைப் பள்ளியில் பொதுத்தேரில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசளித்தார். மாவட்ட கூடுதல் கருவூல அலுவலர் அருள்செல்வன், வி.ஆர்.பி., பள்ளி தாளாளர் சோழன், தலைமை நிலைய செயலாளர் அப்பாசாமி, கடலுார் மாவட்ட தலைவர் சிவராமன் உட்பட பலர் பங்கேற்றனர்.