ADDED : ஜூலை 27, 2025 03:55 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரத்தில் சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மத்திய, மாநில அரசு மற்றும் பொதுத்துறை ஓய்வூதியர்கள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு மாவட்ட தலைவர் ஐயாக்கண்ணு தலைமை தாங்கினார்.
நிர்வாகிகள் பொன்முடி, புருஷோத்தமன், ராமமூர்த்தி முன்னிலை வகித்தனர். நிர்வாகி மேகநாதன் பேசினார். இதில், ஓய்வூதியம் திருத்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டது.
மாவட்ட பொருளாளர் ரத்தினம் நன்றி கூறினார்.

