ADDED : ஜூலை 28, 2025 10:14 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்; விழுப்புரத்தில் ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம் சார்பில் ஓய்வூதியர் எழுச்சி நாள் விழா நடந்தது.
வி.ஆர்.பி., மேல்நிலை பள்ளியில் நடந்த விழாவிற்கு, மாவட்ட தலைவர் சிவனேசன் தலைமை தாங்கினார். பள்ளி தாளாளர் சோழன், இணைச் செயலாளர் துரைக்கண்ணு, வட்ட செயலாளர் சேகர், துணைத் தலைவர் தென்னரசு முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் அருணகிரி வரவேற்றார்.
மறைந்த நாராயணராவ் ்படத்தை பொருளாளர் பர்னபாஸ் திறந்து வைத்து அஞ்சலி செலுத்தினார். மாவட்ட பிரசார செயலாளர் முத்துகிருஷ்ணன், மாநில இணைச் செயலாளர் ரகுபதி பேசினர்.
ஓய்வு பெற்ற அரசு கல்லூரி ஆசிரியர் சங்க துணை தலைவர் நிசார், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்கள் ராமமூர்த்தி, தட்சணாமூர்த்தி, நிர்வாகிகள் கலியமூர்த்தி, குணசேகரன், ஜோசப், பழனி உட்பட பலர் பங்கேற்றனர்.