/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஏரியில் அதிகளவில் மண்ணை எடுத்து விற்பதாகக்கூறி மக்கள் போராட்டம்
/
ஏரியில் அதிகளவில் மண்ணை எடுத்து விற்பதாகக்கூறி மக்கள் போராட்டம்
ஏரியில் அதிகளவில் மண்ணை எடுத்து விற்பதாகக்கூறி மக்கள் போராட்டம்
ஏரியில் அதிகளவில் மண்ணை எடுத்து விற்பதாகக்கூறி மக்கள் போராட்டம்
ADDED : அக் 31, 2024 12:32 AM

விழுப்புரம் : திண்டிவனம் அருகே ஏரியை ஆழப்படுத்துவதாக கூறி, அதிகளவில் மண்ணை எடுத்து விற்பதைக் கண்டித்து கிராம மக்கள் பணியை தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டிவனம் அருகே உள்ள வேம்பூண்டி கிராமத்தில் உள்ள ஏரியை ஆழப்படுத்துவதற்காக, அதிலிருந்து மண்ணை வெட்டி எடுத்து, அதனை விற்று வருவதாக புகார் எழுந்தது.
இந்நிலையில், ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் ஆழப்படுத்தாமல், கரையின் மேடான பகுதியில் செம்மண் அதிகளவில் இருக்கும் இடத்தில், அதிகளவில் பள்ளம் தோண்டி மண் அள்ளப்பட்டும், அதனை வெளி மாவட்டங்களுக்கு விற்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், நேற்று காலை 10.30 மணியளவில் ஏரிக்கு திரண்டு சென்று, அங்கு மண் வெட்டி எடுத்த பொக்லைன் இயந்திரம் மற்றும் டிப்பர் லாரிகளை மறித்து, பணியை தடுத்து நிறுத்தினர்.
இதுகுறித்து பொது மக்கள் தரப்பில் கூறும் போது,'' ஏரியை ஆழப்படுத்த மண் எடுப்பதாக இருந்தால், நீர்பிடிப்பு பகுதியில் நீர் வற்றிய பிறகு ஆழப்படுத்த வேண்டும், அதைவிடுத்து கரைப்பகுதியில் உள்ள நல்ல பாதுகாப்பான மண்ணை விற்பனைக்காக எடுப்பதை நிறுத்த வேண்டும். ஏரியை ஆழப்படுத்த விரும்பினால், உரிய அனுமதி பெற்றும், மக்களிடம் ஆலோசித்த பிறகும், பணியை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தனர். எதிர்ப்பு காரணமாக, ஏரியில் மண் எடுக்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டது.

