/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரம் கமலா கண்ணப்பன் நகரில் பழுதான சாலையால் மக்கள் அவதி
/
விழுப்புரம் கமலா கண்ணப்பன் நகரில் பழுதான சாலையால் மக்கள் அவதி
விழுப்புரம் கமலா கண்ணப்பன் நகரில் பழுதான சாலையால் மக்கள் அவதி
விழுப்புரம் கமலா கண்ணப்பன் நகரில் பழுதான சாலையால் மக்கள் அவதி
ADDED : அக் 14, 2025 06:59 AM

விழுப்புரம்,; விழுப்புரம் கமலா கண்ணப்பன் நகரில் சேதமான சாலைகளை சீரமைத்து தருமாறு, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் கமலா கண்ணப்பன் நகர் குடியிருப்போர் நலச் சங்கத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் நிர்வாகிகள், கலெக்டர் அலுவலகத்தில் அளித்துள்ள மனு:
விழுப்புரம் நகராட்சி 25வது வார்டு பகுதியில் அமைந்துள்ள சாலைகள், மழை நீர் தேங்கி சேதமடைந்துள்ளன. மாம்பழப்பட்டு மெயின் ரோட்டில் இருந்து கலெக்டர் அலுவலகம் நோக்கிச் செல்லும் தையல்நாயகி தெருவில், ஜல்லிகள் பெயர்ந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது.
மழைக் காலத்தில் தெருவில் தண்ணீர் தேங்கி, வாகன ஓட்டிகள், ெபாதுமக்கள் அவதிப்படுகின்றனர். இதேபோல் நடராஜன் தெரு, சிவகடாட்சம் தெருக்களில் ஜல்லிகள் பெயர்ந்துள்ளன. மேலும், கிருஷ்ணப் பிள்ளை தெரு, ேவலுப் பிள்ளை தெரு, ெஜயலட்சுமி தெரு, மீராபாய் வீதி, சரவணவேலு தெரு ஆகியவற்றை சீரமைத்திட நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு மனுவில் கூறப் பட்டுள்ளது.