/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஆயுதபூஜை பொருட்கள் வாங்க மார்க்கெட்டில் குவிந்த மக்கள்
/
ஆயுதபூஜை பொருட்கள் வாங்க மார்க்கெட்டில் குவிந்த மக்கள்
ஆயுதபூஜை பொருட்கள் வாங்க மார்க்கெட்டில் குவிந்த மக்கள்
ஆயுதபூஜை பொருட்கள் வாங்க மார்க்கெட்டில் குவிந்த மக்கள்
ADDED : அக் 01, 2025 01:10 AM

விழுப்புரம்; ஆயுதபூஜை பொருட்கள் வாங்குவதற்கு மார்க்கெட் பகுதிகளில் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
வீடு, கடை, தொழிற்சாலை, அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் உள்பட பல்வேறு இடங்களில், இன்று 1ம் தேதி ஆயுதபூஜை விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி பணி செய்யும் இடங்களில், வண்ண மயமான காகித தோரணங்கள், செயற்கை பூக்கள், பிளாஸ்டிக் மாலைகள், அலங்காரப் பொருட்கள் ஆகியவற்றால் அலங்கிரித்து வருகின்றனர்.
இந்நிலையில் விழுப்புரத்தில் உள்ள சூப்பர் மார்க்கெட், ஸ்டேஷனரி மற்றும் சீசன் நேர கடைகளில், ஆயுத பூஜைக்கு தேவையான அலங்கார மற்றும் பூஜை பொருட்கள் விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ளன.
இந்த பொருட்களை வாங்குவதற்கு விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி உள்ளிட்ட பகுதி மார்க்கெட்டில் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
ஆயுதபூஜையை முன்னிட்டு பூக்கள், வழக்கத்தைவிட கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டது.