/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தி.மு.க., ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற மனநிலைக்கு மக்கள் வந்து விட்டார்கள் அ.தி.மு.க., 'மாஜி' அமைச்சர் சண்முகம் பேச்சு

ADDED : பிப் 23, 2026 04:11 AM

திண்டிவனம்: 'தமிழக மக்கள் தி.மு.க., ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற மனநிலைக்கு வந்து விட்டார்கள்' என அ.தி.மு.க., செயல் வீரர்கள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சண்முகம் பேசினார்.
ஓமந்துாரில் விழுப்புரம் மாவட்ட ஜெ., பேரவையின் செயல் வீரர்கள் கூட்டம், மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் அர்ஜூனன் எம்.எல்.ஏ., தலைமையில் நடந்தது.
மாநில பேரவை துணைச் செயலாளர்கள் பாலசுந்தரம், சங்கர் முன்னிலையில் நடந்த கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் சண்முகம் பேசியதாவது:
அ.தி.மு.க., இரண்டு முறை சின்னம், கட்சி பிளவுபட்ட போதும், அ.தி.மு.க., கதை முடிந்து விட்டது என சொன்ன பத்திரிகைகள் இன்று அ.தி.மு.க., வெற்றி பெறும் என சொல்கிறது.
'தினமலர்' பத்திரிக்கையில் தி.மு.க., 33 சதவீதம், அ.தி.மு.க., 37 சதவீதம் பெற்று வெற்றி பெறும் என சொல்கிறது. வெற்றி கோட்டிற்கு அருகில் நிற்கிறோம்.
வருகின்ற தேர்தல் நமக்கு முக்கிமானது. கருத்து வேறுபாடுகளை மறந்து அ.தி.மு.க., வெற்றிக்கு பாடு பட வேண்டும். அ.தி.மு.க.,வில் ஜெ.,பேரவையில் இருந்த நானும், நயினார் நாகேந்திரனும் அமைச்சராக இருந்தோம். இங்கு உள்ள யாராவது ஒருவர் அமைச்சராக வரலாம்.
அ.தி.மு.க.,வில் அடிமட்ட தொண்டனாக இருந்து பொதுச் செயலாளராக ஆனவர் பழனிசாமி ஒருவர் தான். தி.மு.க.,வில் உள்ளது போன்று காங்., நேருவில் தொடங்கி பிரியங்கா வரை வாரிசுகள்தான் பதவியில் உள்ளனர்.
அ.தி.மு.க.,வில் மட்டும்தான் யார் வேண்டுமென்றாலும் பொறுப்பிற்கு வரலாம்.
தமிழக மக்களுக்கு என்னதான் பணம் கொடுத்தாலும், கவர்ச்சிகரமான திட்டங்களை கூறினாலும், தமிழக மக்கள் தி.மு.க., ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற மனநிலைக்கு வந்து விட்டார்கள்.
மக்கள் ஒரு தடவை முடிவு செய்துவிட்டால், நீங்கள் என்னதான் கொடுத்தாலும் முடிவை மாற்றிக் கொள்ள மாட்டார்கள்.
இவ்வாறு சண்முகம் பேசினார்.