/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தரைப்பாலம் அமைத்து தர கோரி உண்ணாவிரதம் திருவெண்ணெய்நல்லுாரில் மக்கள் கோபம்
/
தரைப்பாலம் அமைத்து தர கோரி உண்ணாவிரதம் திருவெண்ணெய்நல்லுாரில் மக்கள் கோபம்
தரைப்பாலம் அமைத்து தர கோரி உண்ணாவிரதம் திருவெண்ணெய்நல்லுாரில் மக்கள் கோபம்
தரைப்பாலம் அமைத்து தர கோரி உண்ணாவிரதம் திருவெண்ணெய்நல்லுாரில் மக்கள் கோபம்
ADDED : ஏப் 24, 2025 05:28 AM

திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அருகே தரைப்பாலம் அமைத்து தர கோரி கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அடுத்த அரசூர் (பாரதி நகர்) பகுதி சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது. அப்பகுதியில் கடந்த 2 ஆண்டுகளில் நடந்த விபத்துக்களில் 8க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். தற்போது பாரதி நகர் - அரசூர் கூட்ரோடு பகுதியில் மேம்பாலம் அமைக்க பணி நடந்து வருகிறது.
விபத்துக்களை தவிர்க்க பாரதி நகர் பஸ் நிறுத்தம் பகுதியில் தரைப்பாலம் அமைத்து தர அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். நகாய் நிர்வாகம் கோரிக்கை ஏற்காததால், 500க்கும் மேற்பட்ட மக்கள் வி.சி., மத்திய மாவட்ட செயலாளர் பெரியார், அரசூர் ஊராட்சி தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில் கருப்பு நிற ஆடை அணிந்து, கூட்ரோடு பகுதியில் நேற்று காலை 9:00 மணி முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் ஏ.எஸ்.பி.,ரவீந்திர குமாரகுப்தா, டி.ஆர்.ஓ., ஆர்.டி.ஓ., முருகேசன், தாசில்தார் செந்தில்குமார், இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ் மற்றும் நகாய் அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு சென்றனர். போராட்டக்காரர்கள் அதிகாரியிடம் கடும் வாக்குவதத்தில் ஈடுபட்டதால் அதிகாரிகள் கலைந்து சென்றனர்.
மாலை 3:00 மணிக்கு, கள்ளக்குறிச்சி அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் குமரகுரு, பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கால அவகாசம் அளிக்க வேண்டும். நடவடிக்கை எடுக்கவில்லை எனில் மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடத்துவேன் என உறுதி அளித்தார். அதைத் தொடர்ந்து, மதியம் 3:15 மணிக்கு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

