/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வெள்ள நிவாரணம் வழங்கக்கோரி தேற்குணம் மக்கள் சாலை மறியல்
/
வெள்ள நிவாரணம் வழங்கக்கோரி தேற்குணம் மக்கள் சாலை மறியல்
வெள்ள நிவாரணம் வழங்கக்கோரி தேற்குணம் மக்கள் சாலை மறியல்
வெள்ள நிவாரணம் வழங்கக்கோரி தேற்குணம் மக்கள் சாலை மறியல்
ADDED : டிச 20, 2024 04:59 AM

வானுார்: வெள்ள நிவாரணம் வழங்கக்கோரி, தேற்குணம் கிராம மக்கள், புதுச்சேரி - திண்டிவனம் பைபாசில் மறியலில் ஈடுபட்டனர்.
பெஞ்சல் புயல் மற்றும் மழை நிவாரணம் வழங்காததை கண்டித்து தைலாபுரம் கிராம மக்கள் நேற்று காலை 10:00 மணிக்கு தைலாபுரம் மெயின் ரோட்டில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
கிளியனுார் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, விரைவில் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதனை தொடர்ந்து 10:15 மணிக்கு மறியல் கைவிடப்பட்டது.
மேலும் ஒரு மறியல்
தேற்குணம் கிராம மக்கள் நிவாரணம் வழங்கக்கோரி ஊராட்சி தலைவர் வினோதினி குமார் தலைமையில், புதுச்சேரி - திண்டிவனம் பைபாசில் கிளியனுார் செல்லும் சந்திப்பு சாலையில் 11:30 மணியளவில் மறியலில் ஈடுபட்டனர். கிளியனுார் போலீசார் மற்றும் வானுார் தாசில்தார் நாராயணமூர்த்தி பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் ஒரு வாரத்திற்குள் நிவாரணம் வழங்குவதாக உறுதி அளித்தனர். அதை ஏற்று 12:00 மணியளவில் கலைந்து சென்றனர்.
செஞ்சி
வல்லம் அடுத்த மரூர் கிராமத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வெள்ள நிவாரணம் கேட்டு நேற்று காலை 9:30 மணியளவில் செஞ்சி - ரெட்டணை சாலையில் மறியல் செய்தனர்.
தகவல் அறிந்து வந்த செஞ்சி போலீசார் மற்றும் வருவாய் துறையினர் பேச்சு வார்த்தை நடத்தி, விரைவில் நிவாரணம் பெற்று தருவதாக உறுதியளித்தனர். இதையடுத்து 9:20 மணிக்கு மறியலை கைவிட்டனர்.