/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தரமற்ற குடிநீரால் மஞ்சள் காமாலை கலெக்டரிடம் மக்கள் மனு
/
தரமற்ற குடிநீரால் மஞ்சள் காமாலை கலெக்டரிடம் மக்கள் மனு
தரமற்ற குடிநீரால் மஞ்சள் காமாலை கலெக்டரிடம் மக்கள் மனு
தரமற்ற குடிநீரால் மஞ்சள் காமாலை கலெக்டரிடம் மக்கள் மனு
ADDED : ஆக 12, 2025 11:10 PM

விழுப்புரம் : தரமற்ற குடிநீரால் மஞ்சள் காமாலை பாதிப்பிற்குள்ளாகி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
விக்கிரவாண்டி அருகே செ.குன்னத்துார் காலனி பகுதியை சேர்ந்த மக்கள் நேற்று விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் வந்து மனு அளித்தனர்.
இது குறித்து அவர்கள் கூறியதாவது:
எங்களுக்கு ஊராட்சி சார்பில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி மூலம் குடிநீர் வினியோகம் நடக்கிறது.
கடந்த சில மாதங்களாக குடிநீர் மாசடைந்து குழம்பி வருவதால், அதனை தொடர்ந்து குடித்து வரும் மக்களுக்கு மஞ்சள் காமாலை பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
கடந்த ஒரு மாதத்தில் பலர் மஞ்சள் காமாலை பாதிப்பில் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தரமற்ற குடிநீரை பயன்படுத்துவதால், நோய் பாதிப்பு ஏற்படுவதாக மருத்துவமனை ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். குடிநீர் டேங்க் சுத்தப்படுத்தாமல் உள்ளதால், அதனுள் ஏராளமான குப்பைகள் தேங்கி கிடக்கின்றன.
இது குறித்து ஆய்வு செய்து, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.