/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வீடுகளில் ஆற்று வெள்ளம் புகுந்தது படகுகள் மூலம் மீட்கப்பட்ட மக்கள்
/
வீடுகளில் ஆற்று வெள்ளம் புகுந்தது படகுகள் மூலம் மீட்கப்பட்ட மக்கள்
வீடுகளில் ஆற்று வெள்ளம் புகுந்தது படகுகள் மூலம் மீட்கப்பட்ட மக்கள்
வீடுகளில் ஆற்று வெள்ளம் புகுந்தது படகுகள் மூலம் மீட்கப்பட்ட மக்கள்
ADDED : டிச 03, 2024 06:57 AM

விழுப்புரம்: விழுப்புரம் அருகே வீடுகளில் ஆற்று வெள்ளம் புகுந்ததால், சிறப்பு படையினர் படகு மூலம் மக்களை மீட்டனர்.
விழுப்புரம் மாவட்டம், சின்னகள்ளிபட்டு கிராமத்தில் தென்பெண்ணை ஆற்றின் கரையில் நேற்று காலை முதல் தண்ணீர் மட்டம் அதிகரித்தது. படிப்படியாக ஆற்று வெள்ளம் கரை புரண்டு சின்னக்கள்ளிப்பட்டு கிராமத்தில் உள்ள வீடுகளில் புகுந்தது.
இதனால், வீடுகளில் சிக்கி தவித்த மக்கள் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருடன்,
முதல் மாடி மற்றும் மேடான பகுதிக்கு சென்றனர். தகவலறிந்த தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், விரைந்து சென்று, படகுகள் மூலம் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டனர்.
விஜயவாடாவைச் சேர்ந்த டீம் கமாண்டர் இன்ஸ்பெக்டர் கோபால் கிருஷ்ணா தலைமையிலான 10 வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இவர்கள், நேற்று காலை முதல் இரவு வரை நுாற்றுக்கும் மேற்பட்ட மக்களை வெள்ளத்தில் இருந்து மீட்டு காப்பாற்றினர். பாதிக்கப்பட்ட மக்களை, பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்புவதற்கு, விழுப்புரம் வருவாய் ஆய்வாளர் கதிர்வேல் மற்றும் அரசு அலுவலகர்கள் ஏற்பாடு செய்தனர்.