/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
நகராட்சி இறைச்சி கூடத்தில் துர்நாற்றத்தால் மக்கள் அவதி
/
நகராட்சி இறைச்சி கூடத்தில் துர்நாற்றத்தால் மக்கள் அவதி
நகராட்சி இறைச்சி கூடத்தில் துர்நாற்றத்தால் மக்கள் அவதி
நகராட்சி இறைச்சி கூடத்தில் துர்நாற்றத்தால் மக்கள் அவதி
ADDED : ஆக 28, 2025 11:57 PM

விழுப்புரம்: நகராட்சி மாட்டு இறைச்சி கூடத்தில் இருந்து துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
விழுப்புரம், மாம்பழ பட்டு சாலையில், நகராட்சி சார்பில், ரூ.30 லட்சம் செலவில் மாட்டு இறைச்சி கூட கட்டடம் கட்டப்பட்டுள்ளது.
இங்கு, மாட்டு இறைச்சியை வெட்டி எடுத்து சென்று விற்பனை செய்கின்றனர். இந்த இறைச்சி கூடத்தை சரியாக பராமரிக்காததால் இப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது.
இதனால், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதியில் உள்ள கடைகள், வணிக நிறுவன ஊழியர்கள், பொதுமக்கள் கடும் அவதியடைகின்றனர்.
மேலும், பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இறைச்சி கூடத்தை முறையாக பராமரித்து துர்நாற்றம் வீசுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.