/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
குப்பைகளை தீயிட்டு எரிப்பதால் சுவாச பாதிப்பில் தவிக்கும் மக்கள்
/
குப்பைகளை தீயிட்டு எரிப்பதால் சுவாச பாதிப்பில் தவிக்கும் மக்கள்
குப்பைகளை தீயிட்டு எரிப்பதால் சுவாச பாதிப்பில் தவிக்கும் மக்கள்
குப்பைகளை தீயிட்டு எரிப்பதால் சுவாச பாதிப்பில் தவிக்கும் மக்கள்
ADDED : செப் 08, 2025 03:10 AM

விழுப்புரம்: காகுப்பம் சாலையில் குப்பைகளை கொட்டுவதோடு, அதை தீயிட்டு எரிப்பதால் மக்களுக்கு சுவாச பாதிப்பு ஏற்படுகிறது.
விழுப்புரம், காகுப்பம் செல்லும் சாலையில் பல்வேறு குடியிருப்புகள் உள்ளன. இந்த வழியை பயன்படுத்தி, போலீசார் ஆயுதப்படை மைதானத்திற்கும், மாணவ, மாணவிகள் அரசு பொறியியல் கல்லுாரிக்கும் செல்கின்றனர். காகுப்பம், பொய்யப்பாக்கம் கிராமத்தில் இருந்து பலர் இந்த சாலையின் வழியாக தான் பணிக்கு விழுப்புரம் நோக்கி செல்கின்றனர்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக, காகுப்பம் சாலையோரங்களில் கொட்டப்படும் குப்பைகள் மலைபோல் குவிந்து வருகின்றன.
இந்த குப்பைகளை துப்புரவு பணியாளர்கள் சரியாக சேகரித்து கொண்டு செல்வதில்லை. அந்த குப்பைகளை அவ்வழியே செல்லும் போதை ஆசாமிகள் சிலர் தீயிட்டு கொளுத்திவிட்டு செல்கின்றனர்.
இதன் மூலம் வெளியேறும் நச்சு புகை மூட்டத்தால், குடியிருப்பு மக்களும், அவ்வழியே செல்வோரும் சுவாச பாதிப்பு ஏற்பட்டு தவிக்கின்றனர்.
இது குறித்து நகராட்சி நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.