/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பொங்கல் பூஜை பொருட்கள் வாங்க விழுப்புரம் நகரில் குவிந்த மக்கள்
/
பொங்கல் பூஜை பொருட்கள் வாங்க விழுப்புரம் நகரில் குவிந்த மக்கள்
பொங்கல் பூஜை பொருட்கள் வாங்க விழுப்புரம் நகரில் குவிந்த மக்கள்
பொங்கல் பூஜை பொருட்கள் வாங்க விழுப்புரம் நகரில் குவிந்த மக்கள்
ADDED : ஜன 14, 2026 05:58 AM

விழுப்புரம்: பொங்கல் பூஜை பொருட்கள் வாங்குவதற்கு குவிந்த மக்களால் விழுப்புரம் நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தமிழகத்தில் இன்று போகி மற்றும் நாளை 15ம் தேதி பொங்கல், 16ம் தேதி மாட்டு பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
விழுப்புரம் நகரத்தில் சுற்றுப்பகுதி கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பொங்கல் பூஜை பொருட்கள் வாங்குவதற்கு நேற்று விழுப்புரத்தில் குவிந்தனர்.
இதனால், விழுப்புரம் எம்.ஜி., ரோடு, பாகர்ஷா வீதி, நேருஜி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுந்து நின்றதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.