ADDED : ஆக 27, 2026 07:12 PM
விழுப்புரம்: ஆவணி அவிட்டத்தையொட்டி விழுப்புரத்தில் பிராமணர்கள் பூணுால் மாற்றும் நிகழ்வு நடந்தது.
விழுப்புரம் ஆஞ்சநேயர் கோவில், வைகுண்டவாச பெருமாள் கோவில், சங்கரமடம், ஆரிய வைசிய மண்டபம், விஸ்வகர்மா மண்டபம் உள்ளிட்ட இடங்களில், பிராமணர்கள் மட்டுமின்றி வாணிய செட்டியார், விஸ்வகர்மா சமூகத்தைச் சேர்ந்தவர்களும் பழைய பூணுாலை கழற்றி விட்டு, புதிய பூணுாலை அணிந்து கொண்டனர். இந்த நாளில் வேதம் பயில்வோர் ஆண்டுதோறும் புதுப்பித்து கொள்வதும் வழக்கமாகும்.
சங்கரமடத்தில் நடந்த நிகழ்ச்சியில், சங்கரமடம் ஆசிரியர் வேத விற்பன்னர்கள் சங்கரநாராயணன், சுந்தரராம சாஸ்திரிகள் ஆகியோர், பிராமணர்களுக்கு அவரவர் சம்பிரதாயப்படி பூணுல் மாற்றும் நிகழ்ச்சியை செய்து வைத்தனர்.
இதையொட்டி, காலை 8:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை கணபதி பூஜை, கலச பூஜை, ேஹாமங்கள், வேத பாராயணம் உள்ளிட்டவை நடந்தது.
ஏற்பாடுகளை மடத்தின் மேலாளர் ராமமூர்த்தி செய்திருந்தார்.
