/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சேஷாங்கனுார் கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு
/
சேஷாங்கனுார் கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு
சேஷாங்கனுார் கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு
சேஷாங்கனுார் கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு
ADDED : ஜன 13, 2024 03:44 AM

விழுப்புரம் : விழுப்புரம் அடுத்த சேஷாங்கனூரில் கனரக வாகனங்கள் விதிமீறி வருவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என, கலெக்டரிடம் மனு அளித்தனர்.
பா.ஜ., மாநிலச் செயலாளர் அஸ்வத்தாமன் தலைமையில், கிராம மக்கள் கலெக்டர் பழனியை சந்தித்து அளித்த மனு:
விக்கிரவாண்டி அடுத்த சேஷாங்கனுார் கிராமத்தின் வழியாக தினசரி லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்கின்றன.
மெயின்ரோடு வழியாக இல்லாமல், ஊருக்குள் உள்ள சாலை வழியாக இந்த கனரக வாகனங்கள் விதிமீறி வருவதால் பொது மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
கனரக வாகனங்கள் வரவை நிறுத்த வேண்டும். கிராமத்தில் நுாலகம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தீர்க்கப்படாமல் உள்ளன. எங்கள் பகுதி மகளிர் சுய உதவிக் குழுவினருக்கும், கடன் வசதி வழங்காமல் உள்ளனர்.
இப்பிரச்னைகள் குறித்து, கலெக்டர் அலுவலகம், முதல்வரின் தனிப்பிரிவுக்கும் பல முறை மனு அளித்தும் நீண்டகாலமாக நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர். இந்த கோரிக்கைகளை நிறை வேற்றவேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.