/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வாழ்வாதார இயக்க பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யக்கோரி மனு
/
வாழ்வாதார இயக்க பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யக்கோரி மனு
வாழ்வாதார இயக்க பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யக்கோரி மனு
வாழ்வாதார இயக்க பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யக்கோரி மனு
ADDED : செப் 29, 2024 05:19 AM
விழுப்புரம் : தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கப் பணியாளர்கள், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டரிடம் மனு அளித்தனர்.
மனு விபரம்:
ஊரக வாழ்வாதார இயக்க பணியாளர்களுக்கு ஆண்டு தோறும் ஊதிய உயர்வு வழங்க வேண்டும். அனைத்து துறை அலுவலக வேலையை சுமத்துவதை தவிர்க்க வேண்டும். பணி பாதுகாப்பு வேண்டும்.
பணியின்போது இறந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். வேலை நேரத்தை காலை 10:00 முதல் மாலை 6:00 மணி வரை என நிர்ணயிக்க வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
பணியாளர்களுக்கு பி.எப்., மற்றும் இ.எஸ்.ஐ., பிடித்தம் செய்ய வேண்டும். விடுமுறை தினங்களில் பணி செய்ய கட்டாயப்படுத்தக் கூடாது. கடந்த 12 ஆண்டுகளாக பணியில் உள்ள தங்களை, பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.