/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஏரியில் கரை அமைக்கும் பணியை துவங்க மனு
/
ஏரியில் கரை அமைக்கும் பணியை துவங்க மனு
ADDED : ஆக 26, 2025 11:31 PM

விழுப்புரம்: டி.மழவராயனுாரை சேர்ந்த பொதுமக்கள் விழுப் புரம் கலெக்டர் அலுவலகத்தில், மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:
எங்கள் கிராமத்தில் நீர்வளத்துறை பராமரிப்பில் உள்ள ஏமப்பூர் ஏரிக்கு தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே உள்ள திருக்கோவிலுார் அணைக்கட்டில் இருந்து மலட்டாற்றின் மூலம் தண்ணீர் வருகிறது.
ஏரியின் எதிர்புறம் உள்ள விவசாய நிலங்களில் பல மாதங்களாக தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் பயிர் சாகுபடி செய்ய முடியவில்லை. விவசாயம் செய்து அறுவடை செய்யவும் முடியவில்லை. விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
புதிய கரை அமைக்க சட்டசபை கூட்டத்தொடரில் ரூ.35 லட்சத்திற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த கரை அமைக் கும் பணியினை காலதாமதமின்றி உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.