/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
இலவச மனை பட்டா கேட்டு கலெக்டரிடம் மனு
/
இலவச மனை பட்டா கேட்டு கலெக்டரிடம் மனு
ADDED : மார் 18, 2025 04:42 AM
விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த அனிச்சம்பாளையம் பழங்குடி இருளர்கள் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு கலெக்டரிடம் மனு அளித்தனர்.
விழுப்புரம் அருகே அனிச்சம்பாளையம் பகுதியைச் சேர்ந்த பழங்குடி இருளர்கள், நேற்று காலை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் அளித்த கோரிக்கை மனு:
அனிச்சம்பாளையம் பகுதியில் பல ஆண்டுகளாக, ஏழ்மை நிலையில் குடியிருந்து வருகிறோம். நாங்கள் அன்றாடம் கூலிவேலை செய்து பிழைப்பு நடத்தி வருகிறோம். எங்களுக்கு வீடோ, மனையோ எதுவும் கிடையாது. எங்கள் கிராமத்தில் அரசு புறம்போக்கு இடம் அதிகமாக உள்ளது.
அந்த இடத்தில், எங்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.