/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விக்கிரவாண்டி 'சப்வே' நகாய் இயக்குனரிடம் மனு
/
விக்கிரவாண்டி 'சப்வே' நகாய் இயக்குனரிடம் மனு
ADDED : ஏப் 15, 2025 08:55 PM

விக்கிரவாண்டி; விக்கிரவாண்டி பேரூராட்சி வெங்கடேஸ்வரா நகர் பகுதியில் புறவழிச்சாலையில் சப்வே அமைக்க கோரி நகாய் திட்ட இயக்குனர் வரதராஜனிடம், கவுன்சிலர் ரமேஷ் மனு அளித்தார்.
மனு விபரம்:
விக்கிரவாண்டி நகரிலிருந்து 2 கி.மீ., தொலைவில் வெங்கடேஸ்வரா நகர் உள்ளது. தற்போது விக்கிரவாண்டி வடக்கு பைபாஸ் பகுதியில் தொடர் விபத்துகளை தவிர்க்க மேம்பாலம் கட்டும் பணி துவங்கப்பட உள்ளது.
வெங்கடேஸ்வரா நகர் பகுதி மக்களுக்கு பாதுகாப்பு ஏற்படுத்தும் வகையில் மேற்கு பகுதியில் உள்ள ரயில் நிலையத்திற்கும், தனலட்சுமி நகர், ஒன்றிய மற்றும் பேரூராட்சி அலுவலகத்திற்கு செல்லவும், கோவில், மசூதி ,சென்னை மார்க்க சாலைக்கு செல்லவும் வசதியாக கார், வேன்கள் செல்லும் வகையில் சுரங்கப் பாதை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஏற்கனவே, பேரூராட்சி கூட்டத்தில், இப்பகுதியில் சப்வே அமைக்க தீர்மானம் நிறைவேற்றி நகாய் அலுவலகத்திற்கும், எம்.எல்.ஏ.,வுக்கும் மனு அனுப்பி வைக்கப்பட்டது.
பொதுமக்கள் நலன் கருதி, இப்பகுதியில் சப்வே அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.