/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சாலையில் வடிகால் வாய்க்கால் அமைச்சரிடம் கோரிக்கை மனு
/
சாலையில் வடிகால் வாய்க்கால் அமைச்சரிடம் கோரிக்கை மனு
சாலையில் வடிகால் வாய்க்கால் அமைச்சரிடம் கோரிக்கை மனு
சாலையில் வடிகால் வாய்க்கால் அமைச்சரிடம் கோரிக்கை மனு
ADDED : ஆக 04, 2025 04:48 AM

கோட்டக்குப்பம்: கோட்டக்குப்பம் இ.சி.ஆர்., சாலையில் வடிகால் வாய்க்கால் வசதி ஏற்படுத்தி தரக்கோரி, அமைச்சரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, கோட்டக்குப்பம் சேர்மன் ஜெயமூர்த்தி, அமைச்சர் வேலுவிடம் மனு அளித்தார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
கோட்டக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட பெரிய முதலியார் சாவடியிலிருந்து சின்ன முதலியார் சாவடி வரை இ.சி.ஆரில், மழைக்காலங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மழை நீர் வடிவதற்கு வடிகால் வாய்க்கால் இல்லாததால் தண்ணீர் சாலையில் தேங்கி நிற்கும் நிலை உள்ளது.
இதனால் மழைக்காலங்களில் ஒவ்வொரு முறையும் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து, அப்பகுதியில் இருபுறமும் சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு வடிகால் வாய்க்கால் வசதி அமைத்து தர வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வின் போது, மாநில ஆதி திராவிடர் நலக்குழு இணைச் செயலாளர் புஷ்பராஜ், கவுன்சிலர் சண்முகம், முன்னாள் கவுன்சிலர் பாஸ்கரன், வார்டு செயலாளர் செல்வம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.