ADDED : செப் 29, 2024 04:58 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி : செஞ்சி அடுத்த ஆலம்பூண்டி ஸ்ரீரங்கபூபதி பார்மசி கல்லுாரியில் மருந்தாளுநர் தின விழா நடந்தது.
கல்லுாரி செயலாளர் ஸ்ரீபதி தலைமை தாங்கினார். கல்லுாரி முதல்வர் ராஜேஷ் முன்னிலை வகித்தார். இதில் மாணவர்களுக்கு ஓவியம், வினாடி வினா, பேச்சு போட்டிகள் நடத்தி பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.