/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பைக்கிலிருந்து தவறி விழுந்த மருந்தாளுநர் பலி
/
பைக்கிலிருந்து தவறி விழுந்த மருந்தாளுநர் பலி
ADDED : ஏப் 29, 2025 04:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வானூர்: திண்டிவனம் மரக்காணம் சாலை, மகாத்மா காந்தி நகரை சேர்ந்தவர் ஏழுமலை மகள் ரம்யா, 25;  மயிலம் அரசு மருத்துவமனை சித்தா மருந்தாளுநர். இவர் நேற்று முன்தினம் திண்டிவனம்   ரோகன் பிரதாப், 41; என்பவருடன் பைக்கில் ஆரோவில் அருகே உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார்.  இரும்பை-கோட்டக்கரை சாலை வேகத்தடையில் பைக் ஏறி இறங்கியபோது,  பைக் பின்னால் அமர்ந்திருந்த ரம்யா நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
தலையில் பலத்த காயம் அடைந்த ரம்யா ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார்.  ரம்யாவின் தாயார் சத்யா கொடுத்த புகாரின் பேரில் ஆரோவில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

