/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
போன் நேரு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் அசத்தல்
/
போன் நேரு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் அசத்தல்
ADDED : செப் 04, 2025 01:40 AM

திருவெண்ணெய்நல்லுார் : போன் நேரு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மண்டல அளவில் வெற்றி பெற்று அசத்தி உள்ளனர்.
திருவெண்ணெய்நல்லூர் போன் நேரு மேல்நிலைப் பள்ளியில் பயின்று வரும் பிளஸ் 2 மாணவிகள் ஹாஜிரா, பவித்ரா, ஜீவிதா மற்றும் பிளஸ் 1 மாணவிகள் ஜாஸ்மின், கத்திஜா ஆகிய 5 மாணவிகளும், 19 வயதிற்குட்பட்ட மகளிர் பூப்பந்தாட்ட போட்டியில், குறுவட்ட அளவில் வென்று மாவட்ட அளவிற்கு தேர்வாகியுள்ளனர்.
அதேபோல் 8ம் வகுப்பு பூஷிதா, தனஸ்ரீ, கோபிகா, ஹன்சிகா, கோஷிகா மற்றும் 7ம் வகுப்பு ஷாசஷனா, நிஷாந்தினி ஆகியோர் , 14 வயதுக்குட்பட்ட பூப்பந்தாட்ட போட்டியில் குறு வட்ட அளவில் வெற்றி பெற்றனர்.
மேலும் 9ம் வகுப்பு மாணவி ஷீரின் 14 வயதிற்குட்பட்ட உயரம் தாண்டுதல் போட்டியில் முதல் இடம் பெற்று, தங்கப் பதக்கமும், 400 மீ., தொடர் ஓட்ட போட்டியில் வெள்ளிப் பதக்கமும் பெற்றனர்.
அதேபோல் 8ம் வகுப்பு தனஸ்ரீ, வர்ஷா, 7ம் வகுப்பு மைத்ராதேவி ஆகியோரும் 400 மீ., ஓட்டப்பந்தய போட்டியில் வெள்ளி பதக்கம் பெற்று மாவட்ட அளவிலான போட்டிக்கு தேர்வாகியுள்ளனர்.
இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களையும் அதற்கு வழிகாட்டியாக செயல்பட்ட உடற்கல்வி ஆசிரியர்கள் சுகன்யா, முத்து ஆகியோரை பள்ளி தாளாளர் வாசுதேவன், நிர்வாக இயக்குனர் விஜயசாந்தி வாசுதேவன், உதவி தலைமை ஆசிரியர் சிவகுமார் ஆகியோர் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.