/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தெருக்களில் சூழ்ந்த மழைநீர்: வெளியேற்றக்கோரி மறியல்
/
தெருக்களில் சூழ்ந்த மழைநீர்: வெளியேற்றக்கோரி மறியல்
தெருக்களில் சூழ்ந்த மழைநீர்: வெளியேற்றக்கோரி மறியல்
தெருக்களில் சூழ்ந்த மழைநீர்: வெளியேற்றக்கோரி மறியல்
ADDED : ஜன 09, 2024 01:03 AM

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அடுத்த வி.சாத்தனுாரில் வடிகால் வாய்க்காலை தனி நபர் அடைத்ததால் தெருக்களில் சூழ்ந்த மழைநீர் வெளியேற வழியின்றி தேங்கியதால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
விக்கிரவாண்டி அடுத்த வி.சாத்தனுார் காலனி பகுதியில் 530 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்த பகுதியிலிருந்து கழிவுநீர் கால்வாய் வழியாக அதே பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற எல்லை பாதுகாப்பு படை வீரர் அரிகிருஷ்ணன் என்பவரது நிலத்தின் வழியாக செல்கிறது.
கடந்த சில மாதங்களாக அரிகிருஷ்ணன் தனது நிலத்தில் சவுக்கை பயிரிட்டிருப்பதால் கழிவு நீர் நிலத்தில் செல்லாத வகையில் கழிவு நீர் செல்லும் பாலத்தில் சிமென்ட் பைப்பை அடைத்துள்ளார்.
கடந்த இரு தினங்களாக பெய்த தொடர் மழையினால் மழை நீர் வெளியேற முடியாமல் அப்பகுதி தெருக்களில் வெள்ளம் சூழ்ந்தது.
இதையடுத்து நேற்று காலை 9:00 மணியளவில் இப்பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆசூர்- கொட்டியாம்பூண்டி செல்லும் கிராம சாலையில் இருபுறமும் முட்கள், விறகு கட்டைகளை போட்டு வாகனங்கள் செல்லாமல் வழி மறித்து மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த விக்கிரவாண்டி தாசில்தார் யுவராஜ், மண்டல துணை தாசில்தார் ஆறுமுகம், சப் இன்ஸ்பெக்டர் காத்தமுத்து, வருவாய் ஆய்வாளர் தெய்வீகன்,வி.ஏ.ஓ., அன்பு ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று அரிகிருஷ்ணனிடம் பேசி சமாதானம் செய்து கழிவு நீர் வாய்க்கால் அடைப்பை ஜே.சி.பி., இயந்திரம் மூலம் சரி செய்தனர். இதையடுத்து மழைநீர் வழிந்தோடியது. 11:30 மணிக்கு அனைவரும் கலைந்து சென்றனர்.