நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம், : விழுப்புரத்தில் பன்றிகளை திருடிய 2 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
விழுப்புரம் வெங்கடேஸ்வரா நகரைச் சேர்ந்தவர் அன்னதானபிரபு, 30; இவர் பன்றிகள் வளர்த்து வருகிறார். இவரின் பன்றிகள் இங்குள்ள அரசு கலை கல்லுாரி அருகே மேய்வது வழக்கம் .
இந்நிலையில் அவரது 20 பன்றிகள் திருடு போனதாக அளித்த புகாரின் பேரில், வி.மருதுாரைச் சேர்ந்த சுரேஷ், வெங்கடேஸ்வரா நகர் சந்துரு (எ) கோபாலகிருஷ்ணன் ஆகிய இருவர் மீதும் விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.