ADDED : ஜூன் 04, 2025 12:24 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : மாம்பழப்பட்டு சாலையில் மணல் குவிந்துள்ளதால் விபத்து ஏற்பட்டு வருகிறது.
விழுப்புரம்-திருக்கோவிலுார் நெடுஞ்சாலையில், மாம்பழப்பட்டு சாலை புதுப்பித்து விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதால், வாகனங்கள் அதிவேகமாக செல்கிறது. இதில், விழுப்புரம் சிக்னல் சந்திப்பில் துவங்கி இந்திரா நகர் ரயில்வே கேட் பகுதி வரை சாலையின் இருபுறமும் மணல் குவிந்து கிடக்கிறது. இதனால், இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். சிக்னல் அருகே ஏற்பட்டுள்ள திடீர் பள்ளம் இரவு நேரத்தில் தெரியாததால், இரு சக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர்.