/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தோட்டக்கலை துறை சார்பில் எண்ணெய் பனை நடவு துவக்கம்
/
தோட்டக்கலை துறை சார்பில் எண்ணெய் பனை நடவு துவக்கம்
தோட்டக்கலை துறை சார்பில் எண்ணெய் பனை நடவு துவக்கம்
தோட்டக்கலை துறை சார்பில் எண்ணெய் பனை நடவு துவக்கம்
ADDED : செப் 25, 2024 05:02 AM

விழுப்புரம், : வளவனுாரில், தோட்டக்கலை, மலைப் பயிர்கள் துறை சார்பில், மெகா எண்ணெய்ப் பனை நடவு நிகழ்ச்சி நடந்தது.
வளவனுார் - கெங்கராம்பாளையம் புறவழிச்சாலையில் தனியார் நிலத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, கலெக்டர் பழனி தலைமை தாங்கி, தேசிய சமையல் எண்ணெய் இயக்கத்தின் கீழ், எண்ணெய் பனை நடவு பணியை துவக்கி வைத்தார்.
லட்சுமணன் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார். தோட்டக் கலை துணை இயக்குனர் அன்பழகன் வரவேற்றார்.
மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், கோலியனுார் ஒன்றிய சேர்மன் சச்சிதானந்தம், வளவனுார் பேரூராட்சி சேர்மன் மீனாட்சி ஜீவா சிறப்புரையாற்றினர். வேளாண் இணை இயக்குனர் சீனுவாசன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் பிரேமலதா, கோத்ரெஜ் அக்ரோ நிறுவன தலைமை மார்க்கெட்டிங் அலுவலர் முத்துச்செல்வன், விவசாயிகள் சங்கத் தலைவர் கலிவரதன் வாழ்த்திப் பேசினர்.
கோலியனுார் ஒன்றிய தி.மு.க., செயலாளர் தெய்வசிகாமணி, வளவனுார் நகர செயலாளர் ஜீவா, மாவட்ட கவுன்சிலர் கேசவன், விவசாய தொழிலாளர் அணி தவமணி, முன்னாள் ஊராட்சி தலைவர் நன்னாடு முத்துசாமி, ராமு உட்பட பலர் பங்கேற்றனர்.
வட்டார தோட்டக் கலை உதவி இயக்குனர் வெங்கடேசன் நன்றி கூறினார்.