/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
காணை ஒன்றியத்தில் பனை விதை நடவு
/
காணை ஒன்றியத்தில் பனை விதை நடவு
ADDED : அக் 14, 2024 08:22 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : காணை ஒன்றிய பகுதியில், ஒரு லட்சம் பனை விதைகள் நடவு பணி துவங்கியது.
கல்பட்டு கிராமத்தில் நடந்த துவக்க விழாவிற்கு, புன்னகை பூக்கள் அறக்கட்டளை நிறுவனர் அய்யப்பன் வரவேற்றார். அரசு பள்ளி ஆசிரியர் வேலு முன்னிலை வகித்தார். காணை ஒன்றிய சேர்மன் கலைச்செல்வி தலைமை தாங்கி, பனை விதைகள் நடவு பணியை துவக்கி வைத்தார்.
இதையடுத்து முதல் கட்டமாக தென்பெண்ணை ஆற்றங்கரை பகுதியில், 2000 பனை விதைகள் நடவு பணி நடந்தது. அறக்கட்டளை நிர்வாகிகள் செந்தமிழ்ச்செல்வன், சத்தியமூர்த்தி, லீனஸ்ராஜ், ஆனந்தன், சரவணன், பிரகாஷ் மற்றும் கிராம மக்கள் பங்கேற்றனர்.