/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பிளாஸ்டி கழிவுகள் சேகரிப்பு விழிப்புணர்வு போட்டிகள்
/
பிளாஸ்டி கழிவுகள் சேகரிப்பு விழிப்புணர்வு போட்டிகள்
பிளாஸ்டி கழிவுகள் சேகரிப்பு விழிப்புணர்வு போட்டிகள்
பிளாஸ்டி கழிவுகள் சேகரிப்பு விழிப்புணர்வு போட்டிகள்
ADDED : ஏப் 24, 2025 05:41 AM

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மற்றும் தேசிய பசுமைப்படை சார்பில், பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிப்பு மற்றும் துாய்மை இயக்க விழிப்புணர்வு போட்டிகள் நடந்தது.
விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில், தூய்மைப்படுத்தும் இயக்கம், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு குறித்த ஓவியம் வரைந்து, வர்ணம் தீட்டுதல் மற்றும் வாசகம் எழுதுதல் போட்டிகள் நடந்தது. மாவட்ட கல்வி அலுவலர் சேகர் போட்டிகளை துவக்கி வைத்தார். மாதிரி மகளிர் பள்ளி தலைமை ஆசிரியர் சசிகலா முன்னிலை வகித்தார். 400 மாணவிகள், போட்டியில் பங்கேற்றனர்.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு, மாசுகட்டுப்பாடு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ராஜேந்திரன் பரிசு தொகை, துணிப் பைகளை வழங்கி, பிளாஸ்டிக் பயன்பாடு தவிர்த்தல் குறித்து பேசினார். மாசுகட்டுப்பாடு வாரிய உதவி பொறியாளர்கள் ராம்குமார், சங்கவி, மாவட்ட தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் சரவணன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

