பிளாஸ்டிக் கழிவு குவியலால் கழிவுநீர் கால்வாயில் அடைப்பு
பிளாஸ்டிக் கழிவு குவியலால் கழிவுநீர் கால்வாயில் அடைப்பு
ADDED : செப் 24, 2026 05:21 PM

விழுப்புரம்: விழுப்புரத்தில் கழிவுநீர் கால்வாயில் பிளாஸ்டிக் கழிவுகள் அடைத்துள்ளதை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விழுப்புரம் திரு.வி.க., வீதி மற்றும் அதன் சுற்றுப்புற நகர்களில் நுாற்றுக்கணக்கான குடியிருப்புகளில் மக்கள் வசிக்கின்றனர்.
இங்குள்ள குடியிருப்புகளின் கழிவுநீர், கால்வாய் மூலம் நகராட்சி மைதானத்தையொட்டி, ரயில் நிலையம் வழியாக வெளியேற்றப்படுகிறது.
இந்நிலையில், இந்த கால்வாயில் பிளாஸ்டிக் கழிவுகள் குவியலால் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், கழிவுநீர் செல்லாமல் தேங்கி அப்பகுதி குடியிருப்புகளை சூழும் நிலை ஏற்பட்டது.
மேலும், கழிவுநீர் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுவதால், காவலர் குடியிருப்பு மக்கள், அரசு இசைப்பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இதனால், அப்பகுதியில் மக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே, கழிவுநீர் கால்வாயில் அடைத்துள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
