/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
160 மையங்களில் பிளஸ் 2 செய்முறை தேர்வு துவங்கியது
/
160 மையங்களில் பிளஸ் 2 செய்முறை தேர்வு துவங்கியது
ADDED : பிப் 13, 2024 05:28 AM

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் 160 மையங்களில் பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு துவங்கியது.
விழுப்புரம் மாவட்டத்தில், இந்தாண்டு பிளஸ் 2 பொது தேர்வு, வரும் மார்ச் 1 முதல் 22ம் தேதி வரை நடக்கிறது. பொது தேர்வுக்கான நடைமுறைகள் தொடங்கியுள்ளது. முதல் கட்டமாக அறிவியல், கணினி அறிவியல் பிரிவு மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் தொடங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள 160 மேல்நிலை பள்ளிகளில், செய்முறை தேர்வு நேற்று துவங்கியது.
விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட பள்ளிகளில் நேற்று காலை 9:00 மணிக்கு பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் துவங்கின. 21 ஆயிரத்து 879 மாணவ, மாணவியர்கள் செய்முறை தேர்வில் பங்கேற்கின்றனர். வரும் 18ம் தேதி வரை இந்த தேர்வுகள் காலை தொடங்கி மாலை வரை நடக்கிறது.
ஒவ்வொரு மையத்திற்கும் புறத்தேர்வாளர்கள் நியமிக்கப்பட்டு, முதன்மைக் கல்வி அலுவலர் அறிவழகன் தலைமையில், மாவட்ட கல்வி அலுவலர்கள் கண்காணிப்புடன் தேர்வு நடைபெற்று வருகிறது.