/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பிளஸ் 2 காலாண்டு தேர்வு வேதியியல் வினாத்தாள் 'அவுட்'
/
பிளஸ் 2 காலாண்டு தேர்வு வேதியியல் வினாத்தாள் 'அவுட்'
பிளஸ் 2 காலாண்டு தேர்வு வேதியியல் வினாத்தாள் 'அவுட்'
பிளஸ் 2 காலாண்டு தேர்வு வேதியியல் வினாத்தாள் 'அவுட்'
ADDED : செப் 28, 2024 02:25 AM

விக்கிரவாண்டி:விழுப்புரம் மாவட்டத்தில் பிளஸ் 2 காலாண்டு தேர்வில், வேதியியல் பாடத்திற்கான தேர்வு நடந்தது. இந்த பாடத்திற்கான ஆங்கிலம், தமிழ்வழி வினாத்தாள் மற்றும் ஒரு மார்க் கேள்விகளுக்கான பதில்களும், நேற்று முன்தினம் இரவு 10:00 மணிக்கு, தனியார் பள்ளி மாணவர்களின் சமூக வலைதள குழுவில் பரவியது. அதே வினாத்தாள், நேற்று காலை தேர்வறையில் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் கேட்க முயன்றபோது, அவர் சென்னையில் இருந்ததால், அவரது உதவியாளர் கூறுகையில், 'தேர்வு நடைபெறும் வினாத்தாள், மாவட்டத்தில் 13 நோடல் மையங்களில் இருந்து ஒரு மணி நேரத்திற்கு முன்பாக தேர்வு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் நிலையில், முந்தைய தினம் இரவு சமூக வலைதளங்களில் பரவியது அதிர்ச்சி அளிக்கிறது.
'இதுகுறித்து அனைத்து நோடல் மைய அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்படும். மேலும், குற்றம் எப்படி நடந்தது என்பதை அறிய சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்க முடிவு செய்துள்ளோம்' என்றார்.
கடந்த 22ம் தேதி கணிதம் பாட தேர்வின் போதும், முதல் நாள் இரவு வினாத்தாள் சமூக வலைதளங்களில் பரவியது. அதை அறிந்து, மறுநாள் பள்ளியில் வேறு வினாத்தாள் வழங்கப்பட்டது. சமூக வலைதளத்தில் பரவியது போலி என, அறிவிக்கப்பட்டது.