/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஏரி நீரில் மூழ்கி பிளஸ் 2 மாணவர் பலி
/
ஏரி நீரில் மூழ்கி பிளஸ் 2 மாணவர் பலி
ADDED : ஏப் 02, 2025 03:31 AM
கண்டமங்கலம் : கண்டமங்கலம் அருகே நண்பர்களுடன் ஏரியில் குளித்த பிளஸ் 2 மாணவர் நீரில் மூழ்கி இறந்தார்.
வானுார் அடுத்த பொம்பூரைச் சேர்ந்தவர் சதீஷ் மகன் பேரண்பன், 17; புதுச்சேரி அரியூர் காலனியில் உறவினர் வீட்டில் தங்கி, கண்டமங்கலம் வள்ளலார் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார்.
பொதுத்தேர்வு முடிந்த நிலையில் உறவினர் வீட்டிலே தங்கியிருந்த அவர் நேற்று முன்தினம் காலை அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர்களுடன் அருகில் உள்ள நவமால்காப்பேர் ஏரியில் குளித்தார்.
அப்போது நீரில் மூழ்கினார். நண்பர்கள் கூச்சலிட்டதால் கிராம மக்கள் திரண்டு வந்து ஒரு மணி நேரம் போராடி நீரில் மூழ்கி சேற்றில் சிக்கியிருந்த பேரண்பனை மீட்டு, வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, பரிசோதித்த டாகடர் ஏற்கனவே, பேரண்பன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
கண்மங்கலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

