/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பி.எம்., கிசான் திட்ட சிறப்பு முகாம் விடுபட்ட விவசாயிகளுக்கு அழைப்பு
/
பி.எம்., கிசான் திட்ட சிறப்பு முகாம் விடுபட்ட விவசாயிகளுக்கு அழைப்பு
பி.எம்., கிசான் திட்ட சிறப்பு முகாம் விடுபட்ட விவசாயிகளுக்கு அழைப்பு
பி.எம்., கிசான் திட்ட சிறப்பு முகாம் விடுபட்ட விவசாயிகளுக்கு அழைப்பு
ADDED : மே 16, 2025 02:32 AM
விழுப்புரம்,: பி.எம்., கிசான் திட்ட சிறப்பு முகாமில் விவசாயிகள் பங்கேற்று பயன்பெறலாம்.
விழுப்புரம் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் ஈஸ்வர் செய்திக்குறிப்பு;
விழுப்புரம் மாவட்டத்தில் பி.எம்., கிசான் திட்டத்தின்கீழ் சிறப்பு முகாம் அனைத்து வட்டார வேளாண் மற்றும் தோட்டக்கலை உதவி இயக்குனர்கள் அலுவலகம், இந்திய அஞ்சலக கட்டண வங்கி அலுவலகங்கள், பொது சேவை மையங்களில் வரும் 31ம் தேதி வரை நடக்கிறது.
இத்திட்டத்தில் பிப்., மாதம் வரை -19 தவணைகள் விடுவிக்கப்பட்டுள்ளது. 20-வது தவணை வரும் ஜூன் மாதம் விடுவிக்கப்பட்டு வரவு வைக்கப்பட உள்ளது. எனவே, இத்திட்டத்தில் தவணை நிறுத்தப்பட்ட தகுதியுடைய விவசாயிகள் தங்களது நிலம் பதிவு செய்தல், வங்கி கணக்குடன் ஆதார் இணைப்பது மற்றும் இ-கே.ஒய்.சி., செய்தல் போன்ற இவற்றில் ஏதாவது விடுபட்டிருந்தால் அதனை சரிசெய்து விவசாயிகள் பயன்பெறலாம்.
இத்திட்டத்தில் பதிவு செய்யாத தகுதியான விவசாயிகள் சிட்டா, ரேஷன் கார்டு, ஆதார் அட்டை ஆகிய ஆவணங்களை சமர்ப்பித்து பொது சேவை மையங்களில் புதிதாக பதிவு செய்து பயன்பெறலாம்.
மாவட்டத்தில் இத்திட்டத்தில் 1,658 விவசாயிகள் தங்களது நிலப் பதிவு செய்யாமலும், 933 விவசாயிகள் இ-கே.ஒய்.சி., செய்யாமலும் மற்றும் 4,915 விவசாயிகள் ஆதாருடன் வங்கி கணக்கை இணைப்பு செய்யாமல் உள்ளனர். நில பதிவு, இ-கே.ஒய்.சி., பதிவு மற்றும் வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பு பணியை மேற்கொண்டால் மட்டுமே 20-வது தவணை பெற முடியும்.
இத்திட்டத்தில் பயன்பெறும் பயனாளி இறந்துவிட்டால் அவரது ஆதார் எண் மற்றும் இறப்பு சான்று சம்பந்தப்பட்ட வட்டாரங்களில் சமர்ப்பித்து நிதியை நிறுத்தம் செய்ய வேண்டும். இறந்தவர்களின் வாரிசுதாரர்கள் திட்டத்தில் பயன்பெற தகுதியிருந்தால் தேவையான ஆவணங்களை பொது சேவை மையங்களில் சமர்ப்பித்து புதிதாக பதிவு செய்யலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.