பிரதம மந்திரி சூரிய வீடு மின்சார திட்ட சிறப்பு முகாம்
பிரதம மந்திரி சூரிய வீடு மின்சார திட்ட சிறப்பு முகாம்
UPDATED : அக் 14, 2026 05:09 PM
ADDED : அக் 14, 2026 05:07 PM

வானுார்: தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் கண்டமங்கலம் கோட்டம் சார்பில் திருச்சிற்றம்பலம், தனியார் மகாலில்
பிரதம மந்திரி சூரிய வீடு மின்சார திட்ட சிறப்பு முகாம் நடந்தது. இந்த முகாமை கண்டமங்கலம் செயற்பொறியாளர் ஏழுமலை, துவக்கி வைத்து பேசினார்.
நிகழ்ச்சியில் திருச்சிற்றம்பலம் உதவி செயற்பொறியாளர் பிரசன்னா, வளவனுார் உதவி செயற்பொறியாளர் திருநாவுக்கரசு, கண்டமங்கலம் கோட்ட பிரிவு உதவி பொறியாளர் இளவரசி, மின் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
முகாமில் பிரதம மந்திரி சூரிய வீடு மின்சார திட்டத்தின் மானியங்கள் மற்றும் பலங்கள் பற்றிய விவரங்கள் எடுத்துரைக்கப்பட்டன. மேலும், பிரதம மந்திரி சூரிய வீடு திட்டத்தில் உள்ள சந்தேகங்கள் மற்றும் விளக்கங்களை முகாமில் பங்கேற்ற சூரிய ஒளி தகடு விற்பனையாளர்கள் மற்றும் வங்கியாளர்களிடம் பயனாளிகள் விளக்கம் பெற்று பயன் அடைந்து, சூரிய தகடுகள் அமைப்பதற்கான விண்ணப்பங்களை பதிவு செய்துள்ளனர்.
