/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பா.ம.க.,- அ.தி.மு.க.,வினர் தி.மு.க.,வில் சங்கமம்
/
பா.ம.க.,- அ.தி.மு.க.,வினர் தி.மு.க.,வில் சங்கமம்
ADDED : ஜன 26, 2025 05:40 AM

விழுப்புரம் : விழுப்புரத்தில், பா.ம.க.,- அ.தி.மு.க., நிர்வாகிகள் உட்பட 300 பேர், அமைச்சர் பொன்முடி முன்னிலையில் தி.மு.க.,வில் இணைந்தனர்.
விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், கொளத்தூர் ஊராட்சி பா.ம.க., அவைத் தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமையில், கிளைச் செயலாளர் சுரேஷ், தலைவர் ஜனமே ஜெயம், பொருளாளர் அய்யனார், அ.தி.மு.க., கிளை தலைவர் ராஜாமணி மற்றும் ராஜாராம், ராஜா, வீரமணி, ஆனந்த், வெங்கடேஷ், விஜயகுமார், சரண், ஏழுமலை, அன்புமணி, தமிழரசன், பிரபாகரன், ஞானவேல், ராஜாராம், அய்யப்பன், முருகன், ராஜா ஆகியோரை தி.மு.க., தெற்கு மாவட்ட பொறப்பாளர் கவுதமசிகாமணி சால்வை அணிவித்து, வரவேற்றார். எம்.எல்.ஏ.,க்கள் லட்சுமணன், அன்னியூர் சிவா, மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், மாவட்ட பொருளாளர் ஜனகராஜ், மாநில ஆதிதிராவிடர் நலக்குழு இணை செயலாளர் புஷ்பராஜ், மாவட்ட துணை செயலாளர் தயா இளந்திரையன், ஒன்றிய செயலாளர் முருகவேல், அவைத் தலைவர் தேவகிருஷ்ணன், துணைச் செயலாளர் கலியமூர்த்தி, கிளை செயலாளர் ஹரி கேசவன், இளைஞரணி சின்னசாமி உடனிருந்தனர்.

