/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பா.ம.க., அன்புமணி ஆதரவாளர்கள் கிழக்கு மாவட்ட செயற்குழு கூட்டம்
/
பா.ம.க., அன்புமணி ஆதரவாளர்கள் கிழக்கு மாவட்ட செயற்குழு கூட்டம்
பா.ம.க., அன்புமணி ஆதரவாளர்கள் கிழக்கு மாவட்ட செயற்குழு கூட்டம்
பா.ம.க., அன்புமணி ஆதரவாளர்கள் கிழக்கு மாவட்ட செயற்குழு கூட்டம்
ADDED : ஜூலை 14, 2025 03:37 AM

திண்டிவனம் : திண்டிவனத்தில், விழுப்புரம் கிழக்கு மாவட்ட பா.ம.க., செயற்குழு கூட்டம் நடந்தது.
திண்டிவனம், மயிலம் சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில், அன்புமணி ஆதரவாளர்கள் சார்பில் நடந்த கூட்டத்திற்கு, மாவட்ட தலைவர் சேது தலைமை தாங்கினார். செயலாளர் சங்கர் வரவேற்றார். முன்னாள் நகர செயலாளர் சண்முகம் முன்னிலை வகித்தார்.
மயிலம் தொகுதி எம்.எல்.ஏ., சிவக்குமார், மாநில தேர்தல் பணிக்குழு தலைவர் ஜெயராமன், மாநில கொள்கை விளக்க அணி செயலாளர் பாலாஜி ஆகியோர் பேசினர்.
மாநில தேர்தல் பணிக்குழு கன்னியப்பன், மாநில இளைஞரணி ராஜேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், விழுப்புரத்தில் வரும் 20ம் தேதி வன்னியர்களுக்கு 10.5 இடஒதுக்கீடு வழங்காத தி.மு.க., அரசை கண்டித்து நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் திரளாக பங்கேற்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டம் தொடர்பாக மேடையில் வைக்கப்பட்டிருந்த பேனரில், அன்புமணியின் படத்துடன், பா.ம.க., நிறுவனர் ராமதாசின் படமும் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.