sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பா.ம.க., பேனர் கிழிப்பு நெடுஞ்சாலையில் மறியல்

/

பா.ம.க., பேனர் கிழிப்பு நெடுஞ்சாலையில் மறியல்

பா.ம.க., பேனர் கிழிப்பு நெடுஞ்சாலையில் மறியல்

பா.ம.க., பேனர் கிழிப்பு நெடுஞ்சாலையில் மறியல்


ADDED : மே 05, 2025 06:06 AM

Google News

ADDED : மே 05, 2025 06:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : விழுப்புரத்தில் பா.ம.க., சித்திரை திருவிழா மாநாடு பேனரை மர்ம நபர்கள் கிழித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

வன்னியர் சங்கம் சார்பில் மாமல்லபுரத்தில் வரும் 11ம் தேதி சித்திரை பெருவிழா மாநாடு நடக்கிறது. இதற்காக விழுப்புரம் நகர பகுதியில் பா.ம.க., சார்பில், போலீசாரின் அனுமதி பெற்று விழுப்புரம் - சென்னை தேசிய நெடுஞ்சாலை, பிள்ளையார் கோவில் பஸ் நிறுத்தத்தில் டிஜிட்டல் பேனர் வைத்துள்ளனர்.

இந்த பேனரின் அடிப்பகுதியில் மர்ம நபர்கள் சிலர் நேற்று அதிகாலை கிழித்துள்ளனர்.

இதனை கண்டித்து, பா.ம.க., நிர்வாகிகள் 15க்கும் மேற்பட்டோர் நேற்று காலை 8:15 மணிக்கு சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த விழுப்புரம் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று, பா.ம.க., நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா மூலம் பேனரை கிழித்த நபர்களை பிடிப்பதாக போலீசார் உறுதியளித்தனர். அதனைத் தொடர்ந்து, 8:30 மணிக்கு மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

தொடர்ந்து பா.ம.க., நிர்வாகிகள், பேனரை கிழித்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, விழுப்புரம் டவுன் போலீசாரிடம் மனு கொடுத்தனர்.






      Dinamalar
      Follow us