பா.ம.க., வேட்பாளர் சிவக்குமார் மாம்பழம் சின்னத்திற்கு ஓட்டுசேகரிப்பு
பா.ம.க., வேட்பாளர் சிவக்குமார் மாம்பழம் சின்னத்திற்கு ஓட்டுசேகரிப்பு
ADDED : ஏப் 15, 2026 05:08 PM

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி தொகுதியில் பா.ம.க., வேட்பாளர் சிவகுமார் மாம் பழம் சின்னத்திற்கு ஓட்டு கேட்டு பிரசாரம் செய்தார்.
விக்கிரவாண்டி தொகுதி காணை மேற்கு ஒன்றியம் காணை, குப்பம், காங்கேயனுார் அகரம் சித்தாமூர் உள்ளிட்ட பகுதியில் பா.ம.க., வேட்பாளர் சிவகுமார் மாம் பழம் ் ஓட்டு சேகரித்து பேசியதாவது.
தி.மு.க., ஆட்சியில் விவசாயிகளுக்கு கரும்பு நெல் உள்ளிட்ட பொருட்களுக்கு போதிய விலை கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். அ.தி.மு.க., ஆட்சி மீண்டும் வந்தால் நிலைமைகள் மாறி அனைவரும் மகிழ்ச்சியுடன் இருப்பார்கள். எனவே மாம்பழம் சின்னத்திற்கு ஓட்டளித்து என்னை வெற்றி பெற செய்ய வேண்டும் என சிவக்குமார் பேசினார்.
பா.ம.க., தொகுதி பொறுப்பாளர் ஆலயமணி, மாவட்டத் தலைவர் புகழேந்தி, மாநில ஊடகப்பிரிவு செயலாளர்சுபாஷ் சந்திர போஸ், சந்திரசேகர், ஒன்றிய செயலாளர் ஜெயபிரகாஷ், மாவட்ட நிர்வாகிகள் கனல் காமராஜ், குழந்தைவேலு,சுரேஷ், கலையரசன், அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் முன்னாள்எம்.எல்.ஏ.,முத்தமிழ்
செல்வன், வழக்கறிஞர் அணி ஸ்ரீதர், ராமலிங்கம், முன்னாள் ஒன்றிய செயலாளர் அரங்கநாதன், பா.ஜ., நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர் .
