/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பா.ம.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
/
பா.ம.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
ADDED : டிச 15, 2024 06:41 AM

மயிலம் : மயிலம் அடுத்த கூட்டேரிப்பட்டில் விழுப்புரம் மாவட்ட பா.ம.க., நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு சிவக்குமார் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். விழுப்புரம் வடக்கு மாவட்ட பா. ம.க., அவைத்தலைவர் புகழேந்தி, கிழக்கு மாவட்ட செயலாளர் ஜெயராஜ் முன்னிலை வகித்தனர்.
பா.ம.க., மாநில கவுரவ தலைவர் மணி சிறப்புரையாற்றினார். மாநில செயற்குழு உறுப்பினர்கள் ராஜேந்திரன் செங்கேணி மாவட்ட வன்னியர் சங்க துணை தலைவர் அன்புமணி, மாவட்ட அமைப்பு செயலாளர் பழனிவேல், அறவாழி துவக்க உரையாற்றினர்.
ஒன்றிய செயலாளர்கள் சேட்டு, முத்துகிருஷ்ணன், சண்முகம், ராஜி, வல்லம் ஒன்றிய கவுன்சிலர் கோபால், இளைஞர் அணி செயலாளர் பிரேம்குமார், தனசேகர், மாவட்ட தொழிற்சங்க அணி செயலாளர் தேசிங்கு உட்பட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் விழுப்புரம் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் இருந்து 40 ஆயிரம் பேர் வரும் 21ம் தேதி திருவண்ணாமலை உழவர் பேரியக்க மாநாட்டில் பங்கேற்பது, 24ம் தேதி நடக்கும் 10.5 இட ஒதுக்கீடு போராட்டத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து திரளானோர் பங்கேற்பது என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.