/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பா.ம.க., உழவர் பேரியக்க நிர்வாகிகள் ஆலோசனை
/
பா.ம.க., உழவர் பேரியக்க நிர்வாகிகள் ஆலோசனை
ADDED : நவ 24, 2024 04:30 AM

திண்டிவனம் : பா.ம.க., உழவர் பேரியக்கத்தின் விழுப்புரம் கிழக்கு மாவட்ட ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு, பா.ம.க., மாவட்ட செயலாளர் ஜெயராஜ் தலைமை தாங்கினார். உழவர் பேரியக்க செயலாளர் வீரப்பன் வரவேற்றார். மாநில தலைவர் ஆலயமணி சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில் சமூக நீதி பேரவை செயலாளர் பாலாஜி, பா.ம.க., மாவட்ட தலைவர் பாவாடைராயன், துணைச் செயலாளர் பால்பாண்டியன் ரமேஷ், பொருளாளர் கவிதா, நகர செயலாளர் மணிகண்டன், செயற்குழு உறுப்பினர்கள், முன்னாள் செயலாளர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் வரும் டிசம்பர் 21ம் தேதி திருவண்ணாமலையில் உழவர் பேரியக்கம் சார்பில் நடைபெறும் மாநாட்டில் திரளாக பங்கேற்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.