/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மாநில புறவழிச்சாலையில் சுங்க கட்டணம் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் எதிர்ப்பு..
/
மாநில புறவழிச்சாலையில் சுங்க கட்டணம் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் எதிர்ப்பு..
மாநில புறவழிச்சாலையில் சுங்க கட்டணம் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் எதிர்ப்பு..
மாநில புறவழிச்சாலையில் சுங்க கட்டணம் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் எதிர்ப்பு..
ADDED : ஆக 15, 2025 03:27 AM
திண்டிவனம்: மாநில புறவழிச்சாலையை பயன்படுத்த சுங்க கட்டணம் வசூலிபப்பது என்ற தமிழக அரசின் முடிவுக்கு பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
திண்டிவனம், தைலாபுரம் தோட்டத்தில் நேற்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
சென்னை, திருமங்கலம், அண்ணா நகர் பகுதியில் சிறுமியிடம் தகாத முறையில் ஒன்றுக்கும் மேற்பட்டோர் நடந்துகொண்ட செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. இதில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது போலீசார் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அம்பேத்கர் குறித்த 17 தொகுதிகளை உள்ளடக்கிய நுாலை வெளியிட்ட அமைச்சர் சாமிநாதனை பாராட்டுகிறேன். இதுபோன்று தமிழக அரசு தொடர்ந்து வெளியிட வேண்டும்.
இலங்கை அரசு கைது செய்துள்ள 49 மீனவர்களையும், விசைப்படகுகளை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்கதையாக இருந்து வருவதால் கச்சத்தீவினை மீட்பதன் மூலம் இதுபோன்ற சம்பவங்களுக்கு தீர்வு காண முடியும்.
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தைபோல், தமிழக அரசின் நெடுஞ்சாலை துறையும், சுங்கவரி கட்டணம் வசூலிக்க போவதாக தகவல் வருகிறது. முதற்கட்டமாக வண்டலுார் -மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் சுங்கவரி வசூலிப்பதற்கு தனியாரிடம் விட முடிவு செய்துள்ளது. இதே போல் பல இடங்களில் சுங்க கட்டணம் வசூலிக்கும் உரிமையை தனியாரிடம் அளிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது சரியல்ல.
அகழாய்வில் தமிழ்நாடு எப்போதுமே முன்மாதிரி மாநிலமாக உள்ளது. கீழடி, கொற்கை, சிவகளை, ஆதிச்சநல்லுார், கங்கை கொண்ட சோழபுரம் வரிசையில் புதுக்கோட்டை மாவட்டம் இணைந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. சென்னையில் துப்புரவு பணியாளர்களின் கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும்.
நாடு நல்லா இருக்கணும், நல்ல அரசு அமையணும், போதை வஸ்துகள் ஒழியணும், கஞ்சா இல்லாத தமிழகம் இருக்கணும் என்பதை எனது சுதந்திர தின வாழ்த்துக்களாக தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.