/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பா.ம.க., நிறுவனர் பிறந்த நாள் விழா
/
பா.ம.க., நிறுவனர் பிறந்த நாள் விழா
ADDED : ஜூலை 25, 2025 10:31 PM

விக்கிரவாண்டி, ;விழுப்புரம் மத்திய மாவட்ட பா.ம.க., சார்பில் கட்சி நிறுவனர் ராமதாஸ் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
விழுப்புரம் மத்திய மாவட்டம் ,விக்கிரவாண்டி தொகுதி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி, விழுப்புரம், சிறுவள்ளிக்குப்பம், பகண்டை, மூங்கில்பட்டு ஆகிய இடங்களில் நடந்த விழாவிற்கு, மத்திய மாவட்ட செயலாளர் புகழேந்தி தலைமை தாங்கி கட்சி கொடியேற்றினார்.
தொடர்ந்து, பொதுமக்களுக்கு மரக்கன்றுகள், இனிப்பு, அன்னதானம் வழங்கி பேசினார். மாவட்ட தலைவர் ஸ்டாலின் வரவேற்றார்.
ஒன்றிய செயலாளர்கள் சக்திவேல், குபேந்திரன், துரை, பால முருகன், வேல்முருகன், சங்கர், எழிலரசன், குழந்தைவேல், சந்தோஷ், ஒன்றிய தலைவர்கள் சதாசிவம், கிருஷ்ணமூர்த்தி, முருகவேல், ராமச்சந்திரன் முன்னிலை வகித்தனர்.
மாநில மாணவரணி செயலாளர் பால ஆனந்த், மாவட்ட வன்னியர் சங்க தலைவர் தமிழழகன், மாவட்ட அமைப்பு செயலாளர் திரு, மாநில வன்னியர் சங்க துணை தலைவர் சசிக்குமார்.
இளைஞரணி துணை செயலாளர் போஜராஜன், மாவட்ட இளைஞரணி செயலாளர் சிவக்குமார், இளைஞர்அணி தலைவர் சம்பத், மாநில செயற்குழு உறுப்பினர்கள் தீனவேலு, வேலாயுதம், வெங்கடேசன், திருமால், மாணவரணி செயலாளர் சரண்ராஜ், மாவட்ட துணை செயலாளர் சரவணன், நகர செயலாளர்கள் இளந்திரையன், கங்கையமரன் உட்பட பலர் பங்கேற்றனர்.