/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரத்தில் பா.ம.க., போராட்டம்; சிவக்குமார் எம்.எல்.ஏ., அழைப்பு
/
விழுப்புரத்தில் பா.ம.க., போராட்டம்; சிவக்குமார் எம்.எல்.ஏ., அழைப்பு
விழுப்புரத்தில் பா.ம.க., போராட்டம்; சிவக்குமார் எம்.எல்.ஏ., அழைப்பு
விழுப்புரத்தில் பா.ம.க., போராட்டம்; சிவக்குமார் எம்.எல்.ஏ., அழைப்பு
ADDED : ஜூலை 19, 2025 01:15 AM

விழுப்புரம் : பா.ம.க., வடக்கு மாவட்ட செயலாளர் சிவக்குமார் எம்.எல்.ஏ., வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் உழைக்கும் மக்களான வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கலாம் என உச்சநீதிமன்றம் ஆணையிட்டு 1200 நாட்களாகியும், தி.மு.க., அரசு அதை நிறைவேற்றவில்லை.
வன்னியர் இட ஒதுக்கீடுக்கு பரிந்துரைக்க, தமிழக பிற்பட்டோர் ஆணையத்துக்கு வழங்கிய 30 மாத கெடு நிறைவடைந்தும், ஆணையத்திடமிருந்து அறிக்கை பெறாமல், கால நீட்டிப்பு வழங்கி தமிழக அரசு துரோகம் செய்திருக்கிறது.
ஏற்கனவே வன்னியர்கள் போராடி வென்ற இட ஒதுக்கீட்டில் பயன் கிடைக்காததால் தான், கடந்த ஆட்சியில் மீண்டும் போராடி, 10.50 சதவீதம் உள் இட ஒதுக்கீடு பெறப்பட்டது.
சுப்ரீம் கோர்ட் வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கலாம் என கடந்த, 2022 மார்ச், 31ம் தேதி தீர்ப்பளித்தது. ஆனால், அதன்பின் 1200 நாட்களுக்கு மேலாகியும், சட்டப்படி வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க அரசுக்கு மனமில்லை.
நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ஆகியோர், பல முறை முதல்வரை சந்தித்து அழுத்தம் தந்த காரணமாக, இட ஒதுக்கீடு வழங்க தி.மு.க., அரசு ஒப்புக்கொண்டு, சட்டசபையிலும் முதல்வர் ஸ்டாலின் உறுதியளித்தார். ஆனால், வழங்காமல் தாமதப்படுத்தி வருகின்றனர்.
சுப்ரீம் கோர்ட் ஆணையிட்டும், வன்னியர் இட ஒதுக்கீட்டு சட்டத்தை நிறைவேற்ற மறுக்கும் தி.மு.க., அரசின் சமூக அநீதியை கண்டித்து, பா.ம.க., போராட்டத்தை அறிவித்துள்ளது.
நிறுவனர் ராமதாஸ் வழிகாட்டுதலில், தலைவர் அன்புமணி தலைமையில், நாளை காலை 10:00 மணிக்கு, விழுப்புரம் நகராட்சி திடலில் மக்கள் திரள் போராட்டம் நடக்கிறது.
வன்னியர்களுக்கான சமூகநீதியை வென்றெடுக்கவும், அதன் அடிப்படையில் பிற சமூகங்களுக்கும் உரிய இட ஒதுக்கீடு கிடைப்பதை உறுதி செய்யவும், இந்த போராட்டம் நடக்கிறது.
இதனால், பா.ம.க., வன்னியர் சங்கத்தினர் மட்டுமின்றி, பிற சமூகத்தினர் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் திரண்டு, சமூகநீதியை வென்றெடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.