/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
இருளர் குடியிருப்பில் பா.ம.க., நிவாரணம்
/
இருளர் குடியிருப்பில் பா.ம.க., நிவாரணம்
ADDED : டிச 10, 2024 07:06 AM

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பா.ம.க., சார்பில் வெள்ள நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
விக்கிரவாண்டி தக்காமேடு பகுதியில் உள்ள இருளர் குடியிருப்பில் 39 குடும்பங்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டனர். நேற்று முன்தினம் பா.ம.க., மாநில தலைவர் அன்புமணி நேரில் சந்திந்து நிவாரண உதவியாக அரிசி, வேட்டி, புடவை, போர்வை பிரட் ஆகியவற்றை வழங்கினார்.
வடக்கு மாவட்ட செயலாளர் சிவக்குமார் எம்.எல்.ஏ., மாவட்ட தலைவர் புகழேந்தி, மாநில துணைத் தலைவர் அன்புமணி, மாவட்ட அமைப்பு செயலாளர்கள் பழனிவேல், மணிமாறன், ஏழுமலை, ராஜா, நகர செயலாளர் சங்கர், மாவட்ட தலைவர் ராஜா, ஒன்றிய செயலாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.