தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ ராமதாஸ் அணி நிர்வாகிகளிடம் ஆதரவு திரட்டும் பா.ம.க., சிட்டிங் எம்.எல்.ஏ.,

 ராமதாஸ் அணி நிர்வாகிகளிடம் ஆதரவு திரட்டும் பா.ம.க., சிட்டிங் எம்.எல்.ஏ.,

 ராமதாஸ் அணி நிர்வாகிகளிடம் ஆதரவு திரட்டும் பா.ம.க., சிட்டிங் எம்.எல்.ஏ.,


ADDED : மார் 17, 2026 03:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 17, 2026 03:24 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் தற்போது அ.தி.மு.க., கூட்டணியில் பா.ஜ., - அன்புமணி அணி பா.ம.க., உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும், தி.மு.க., கூட்டணியில் காங்., - வி.சி., - தே.மு.தி.க., உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் இடம்பெற்றுள்ளன.

அ.தி.மு.க., - தி.மு.க., கூட்டணியில் உள்ள கட்சிகள் தங்களுக்கு எத்தனை தொகுதிகள், எந்தெந்த தொகுதிகள் வேண்டும் என பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி தற்போது தி.மு.க., வசம் உள்ளது. இத்தொகுதியில் அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., அல்லது அதன் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் கட்சியினரிடையே ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், பா.ம.க.,வில் அன்புமணி ஆதரவாளரான சிட்டிங் எம்.எல்.ஏ., விக்கிரவாண்டி தொகுதியில் வளம் வருகிறார்.

அவர், ராமதாஸ் அணி நிர்வாகிகளை சந்தித்து, விக்கிரவாண்டி தொகுதியில் பா.ம.க., போட்டியிட்டால் யார் வேட்பாளராக இருந்தாலும் அவரது வெற்றிக்கு பாடுபட வேண்டும் என ஆதரவு திரட்டி வருகிறார்.

பா.ம.க.,வில் பிரிவினை ஏற்பட்டதில் இருந்து ராமதாஸ் அணியினரை சந்திக்காத எம்.எல்.ஏ., தற்போது, அவர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருவது விக்கிரவாண்டி தொகுதியில் அக்கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us