/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தனியார் பள்ளி முதல்வர் மீது 'போக்சோ' வழக்கு
/
தனியார் பள்ளி முதல்வர் மீது 'போக்சோ' வழக்கு
ADDED : ஜன 15, 2024 06:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : திண்டிவனம் அருகே தனியார் பள்ளி முதல்வர் மீது, 'போக்சோ' சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த ரெட்டணையில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வரும் மாணவிக்கு, அந்த பள்ளியின் முதல்வர் கார்த்திகேயன் பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளார். அந்த மாணவியின் பெற்றோர், விழுப்புரம் அனைத்து மகளிர் போலீசில் அளித்த புகாரில், கார்த்திகேயன், 40; மீது, 'போக்சோ' சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.